உறுதிமொழியை பன்னங்கட்டி மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது

காணிகளை சொந்தமாக வழங்குவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் கடந்த 15 நாட்களாக முன்னெடுத்து வந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (சனிக்கிழமை) முடிவுக்கு வந்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், காணி உரிமையாளர்களின் ஒருவரின் மகள் மற்றும் காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி யோசுவா ஆகியோர் சென்று சந்தித்து காணிகளை வழங்குவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மக்களின் நிலைமைகளை பார்வையிட்டதன் பின்னர் தனது உறவினர்களுடன் தொடர்ச்சியாக பேசி காணிகளை வழங்க இணக்கத்திற்குகொண்டு வந்து பன்னங்கண்டி மக்களுக்கு காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்க அதிபர் ஊடாக மேற்கொண்டு வருவதாக காணி உரிமையாளர்களின் ஒருவரின் மகளான மருத்துவர் மாலதிவரன் தெரிவித்துள்ளார்.

மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்ந இம்மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டில் பன்னங்கண்டியில் குடியமர்த்தப்பட்ட நிலையில், பின்னர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தனர். பின்னர், குறித்த கிராமத்தில் இம்மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதோடு, அரசினால் தகரக் கொட்டில்கள் மட்டுமே வழங்கிவைக்கப்பட்டன.

இம் மக்கள் தமக்கான வீட்டுத்திட்டம் மற்றும் அடிப்படை வசதிகளை கோரியுள்ள போதிலும், முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதிப்பிள்ளைக்கு இக்காணி சொந்தமானதால் காணிப்பிரச்சினையை தீர்க்க முடியாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like