யாழை. அச்சுறுத்திய தமிழ் இளைஞர்கள்..! 8 பெறுமதியான பொருட்களுடன் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தென் பகுதியை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வெள்ளாந்திரை மற்றும் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இருவரும், தென் பகுதியை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து நவீன கையடக்க தொலைபேசிகள், பெறுமதியான தங்க நகைகள், உள்ளிட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் 13 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அண்மைக்காலங்களாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like