குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளை கடுமையாக திட்டிய இராணுவ அதிகாரியின் மனைவி

ஆங்கில ஊடக ஆசிரியர் கீத் நொயார் கடத்தி செல்லப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரியின் மனைவி, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரியை கெட்ட வார்த்தையில் திட்டியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வழக்கு விசாரணை கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதான சந்தேக நபரான மேஜர் புலத்வத்தேயின் மனைவி “இவங்க தான் சனியன் பிடித்த நாய்கள்” என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை திட்டியுள்ளார்.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிணை வழங்க முடியாதென நீதிபதி தெரிவித்துள்ளார்.

பிணை கோரியிருந்த நிலையில் மேஜர் புலத்வத்தேயின் மனைவி இவ்வாறு நடந்து கொண்டமையானது பிணை வழங்கக்கூடாதென்ற நோக்கத்திலேயே, என அங்கிருந்த சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

 

You might also like