வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை விளையாட்டு நிகழ்வு
வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தின் தமிழமுதம் முன்பள்ளி மற்றும் சின்னத்தம்பனை விளையாட்டுக்கழகமும் இனைந்து நடாத்திய மாணவர் திறன்காண் மெய்வல்லுனர் போட்டி முன்பள்ளி முன்பள்ளி மைதானத்தில் இடம்பெற்றது
மேலும் இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றி தேசிய மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு சிறார்களின் உடற்பயிற்சி கண்காட்சியுடன் ஆரம்பமானது
இதேவேளை போட்டிகளின் இடைநடுவே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கட்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு ப.உதயராசா சார்பில் அவரது இனைப்பாளரும் சிறீரெலொ கட்சியின் இளைஞரணி தலைவருமான திரு ப கார்த்திக் அவர்களுடன் தாய்மடி நற்பணி நிதியத்தின் ஸ்தாபகர் திருமதி பிரேமிளா அவர்களும் கலந்து கொண்டிருந்தார் சிறப்பு விருந்தினர்களாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிறீரெலோ கட்சியின் மாவட்ட இனைப்பாளர் திரு சூரி சிறீரெலோ கட்சியின் இளைஞரணி செயலாளர் திரு டினேஸ் முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு சங்கரன் சசி தாய்மடி நற்பணி நிதியத்தின் செட்டிகுளம் பிரதேச இனைப்பாளர் திரு ஆனந்தராசா முன்பள்ளிகளின் இனைப்பாளர் திருமதி லூத்மேரி செட்டிகுளம் பிரதேச சமூக சேவையாளரும் வர்த்தகருமான திரு இருதயராசா வீரபுரம் முன்பள்ளி ஆசிரியரும் கலந்து கொண்டு மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளை கண்டு களித்ததுடன் சான்றிதழ்களும் கேடயங்களும் பரிசில்களும் வழங்கி வைத்தனர்.