வவுனியா ஈச்சங்குளத்தில் முதிரை மர குற்றிகள் கடத்தல் முயற்சி முறியடிப்பு

வவுனியாவில் பெருமளவான முதிரை மர குற்றிகள் கடத்த முற்பட்டவர்கள் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களே நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஈச்சங்குளம் பொலிஸ் பரிசோதகர் சுபாஸ் ஆரியரத்தினவின் வழிகாட்டலின் கீழ் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் அடங்கிய குழு மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது 05 அடி நீளமான 09 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like