வவுனியாவில் முதல்முறையாக வவுனியா விபுலானந்த கல்லூரியில் மாணவர்களுக்கு புதிய சட்டம் அமுல்

வவுனியா விபுலானந்த கல்லூரியில் மாணவர்களை ஆண்கள் பெண்கள் என இருவேறு வகுப்புக்களாக பிரித்ததன் காரணம் வெளிவந்தது

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் உயர்தர மாணவர்களை ஆண்கள் பெண்கள் என இருவேறு வகுப்புக்களில் பிரித்து கற்பிதற்கான காரணம் என்னவேன தகவலுக்கான உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்ட வினாவிற்கு பாடசாலையின் அதிபர் சிவநாதன் கீழ்குறித்தவாறு தெரிவித்தார்.

ஆண்கள் , பெண்கள் என பிரித்து கற்பிக்கப்படும் நடைமுறையை பின்பற்றுகின்ற பாடசாலைகளில் (யாழ்ப்பாணம், கொழும்பு ) குறித்த நடைமுறைக்கான நோக்கங்கள் வெற்றியளித்துள்ளமை எமது பாடசாலையிலும் பின்பற்றுகின்றோம். இவ் தீர்மானம் பாடசாலையின் மேம்பாட்டை நோக்காக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி நோக்கங்களுக்காக வகுப்பு பிரிப்பினை நடைமுறைப்படுத்த முற்பட்ட சமயத்தில் ஆண்கள் , பெண்கள் என வகுப்புக்களை பிரிப்பதே குறித்த வகுப்புக்களுக்கு பொருத்தமானதாக அமையுமேன பாடசாலை தலமை கருதியமையினால் மேற்படி வகுப்பு பிரிப்பு இடம்பெற்றது என தகவலுக்கான உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்ட வினாவிக்கு பதிலளித்தார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில்,

உயிரியல் பிரிவு மாணவர்கள் ஆண்கள் ,பெண்கள் என இருபாலரும் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் சமயத்தில் அவர்களது சந்தேகங்களை தீர்த்து கொள்ள கடினமாகவிருப்பதனால் இவ் நடைமுறை வவுனியா விபுலானந்த கல்லூரியில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சில பாடசாலைகளில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

You might also like