கிளிநொச்சியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ம.கணேசராஜா முன்னிலையில் குறித்த நபர் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து, எதிர்வரும் 7ம் திகதி வரைக்கும் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் ஒரு போத்தல் கசிப்பு உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அக்கராயன் பொலிஸார், குறித்த நபரை கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like