வவுனியா மாவட்ட முதியோர் தினவிழா!

வட மாகாண சமூக சேவைகள் திணைக்களமும், வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து வவுனியா மாவட்ட முதியோர் தின விழாவை இன்று வவுனியாவில் நடாத்தியுள்ளன.

குறித்த விழா வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, புதிய பேருந்து நிலையத்தில் முதியோர்களின் பயண வசதிக்காக ஆசனம் ஒதுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் ‘முதியோர் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்’ என்ற தொனிப்பொருளில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகரசபை கலாச்சார மண்டபம் வரை ஊர்வலம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதில், வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கைதடி முதியோர் இல்ல பொறுப்பதிகாரி, பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like