பிரத்தியேக வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு ஆளுநர் ரோகித எச்சரிக்கை! மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை இருந்து காலை தொடக்கம் மதியம் 12 மணி வரை சமயப்பாடசாலைகள் தவிர்ந்த வேறு எதுவித பிரத்தியேக மற்றும் பாடசாலை வகுப்புக்கள் பாடசாலைகளிலும் டியூசன் நிலையங்களிலும் நடைபெறக்கூடாது என கிழக்குமாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம கட்டளை பிறப்பித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து தகவலை அவர் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டம் ஒன்றின் போதே தெரிவித்துள்ளார்.

இந்த அறிவுறுத்தலினை மீறி ஞாயிறு காலை வகுப்பு நடாத்துபர்களிற்கு எதிராக பல ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆசிரியர் ஒருவர் இவ்வாறு பிரத்தியேக பாடம் ஒன்றினை நடத்தியது உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு ஐந்து வருடங்களுக்கு மிகவும் தூரமான இடத்திற்கு இடமாற்றம் வழங்குமாறு மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு கண்டிப்பான உத்தரவிட்டதுடன் இவ்விடையத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸ் அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப்பணிப்பாளர், நான்கு மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மத தலைவர்கள் மற்றும் பொலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட கிழக்கு மாகாண கல்வி திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like