வவுனியாவிற்கு அருகில் பரவி வரும் ஒரு வகை சொறி நோய்!

அநுராதபுரம் மாவட்டத்தில் கிராமிய பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி நாய்களுக்கு ஒரு வகை சொறி நோய் பரவி வருவதாக மாவட்ட வைத்திய அதிகாரி சுவர்னலால் திஸாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.

இந்த நாய்கள் வீட்டு முற்றத்தில் நடமாடும் போதும், படுத்துறங்கும் போதும் நோய் கிருமிகள் விரைவாக மண்ணில் பரவுவதாகவும் அவ்விடங்களில் சிறுவர்கள் நடமாடுவதனால் அவை சிறுவர்களுக்கு தொற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அந்நோய் சிறுவர்களை பராமரிக்கும் பெரியவர்கள், தாய்மாருக்கும் தொற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் வைத்திய சிகிச்சைகளுக்காக வரும் அதிகமான சிறுவர்கள் மற்றும் வளர்ந்தவர்கள் இவ்வகை சொறி, சிரங்கு நோய்களுக்கு உட்பட்டிருப்பதால் பொது மக்களை பாதுகாக்க உடனடியாக கட்டாக்காலி நாய்களை வீட்டுச் சூழலிருந்து அப்புறப்படுத்துமாறும் மாவட்ட வைத்திய அதிகாரி சுவர்னலால் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like