6 வருடமாக கணவனை முதுகில் சுமக்கும் மனைவி! கண்கலங்க வைக்கும் காதல் கதை..

கணவன் மனைவி பந்தத்தை யாராலும் பிரிக்கமுடியாது. இறுதி வரை வரும் சொந்தம் அதுவே. இங்கு ஒரு காணொளியில் மனைவி கணவனை பார்த்துக்கொள்ளும் விதத்தை பார்த்தால் அனைவருக்கும் கண்களில் கண்ணீர் நிச்சயம் வரும்.

கணவருக்கு கடந்த ஆறு வருடமாக டையாலிசில் செய்து வருகிறோம். அவரது சீறுநீரகம் செயலிழந்து விட்டது, கல்லீரலும் வீக்கம் அடைந்துள்ளது, இடது கை செயலிழந்துள்ளது.

இதனால் அவரை நான் தான் முற்றிலுமாக கவனித்து கொள்கிறேன். என் கனவனை நான் அதிகமாக முதுகில் தூக்கி சுமப்பதால் என் முதுகெழும்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் என்னை கனமான பொருட்களை கூட தூக்க கூடாது என்று அறிவுருத்தியுள்ளனர்.

முதலில் அவரை தூக்கி செல்வதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை, அடுத்தவர் என்ன சொல்வார்கள் என யோசித்தார். ஆனால் நான் எதை பற்றியும் கவலை கொள்ளவில்லை. என் கணவர் நான் தூக்கிச் செல்கிறேன் என்று இருந்தேன்.

ஒரு வாரத்திற்கு மூன்று முரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். அவரை வீட்டில் இருந்து கீழே தூக்கிச் சென்று பின் ஆட்டோகளை தேடுவேன். எதுவும் கிடைக்காத நேரத்தில் மருத்துவமனை வரை தூக்கி செல்வேன்.

பல வகையில் நான் வருமானத்தை கூட்ட தொடங்கினேன்.

நான் கஷ்டப்படுவதை பார்த்து அவர் பல முறை அவரை விட்டு செல்லும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் என் கணவர் நான் அவரை பிரிய மாட்டேன்.

மரணம் ஒன்றால் தான் எங்களை பிரிக்க நேரும்.

இவர்கள் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, இவரது கணவரை சுமந்து செல்ல வீல்சேர் ஒன்று வழங்கியுள்ளனர். தற்போது ஒரு ஆம்புலென்ஸ் எங்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வருகிறது என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார் மனைவி.

You might also like