பிரபல நடிகையான மாயா கிருஷ்ணன் மீது தியேட்டர் நடிகை அனன்யா ராம்பிரசாத் metoo மூலம் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சமீப காலமாகவே பிரபலங்கள் பலரும், உலகத்தையே உலுக்கி வரும் Metoo-வில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதிலும், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி வைத்த குற்றசாட்டு அனைத்து ஊடகங்களிலும் விவாத பொருளாக மாறியது.
இந்த நிலையில் தமிழில் வானவில் திரைப்படத்தின் அறிமுகமான நடிகை மாயா கிருஷ்ணன், தான் சிறு வயதாக இருக்கும்போது பாலியல் தொல்லை கொடுத்தார் என தியேட்டர் நடிகையும், மொடல் அழகியான அனன்யா ராம்பிரசாத் Metoo -வில் புகார் தெரிவித்துள்ளார்.
அதில், எனக்கு வயது 18 இருக்கும்போது மாயா கிருஷ்ணனை சந்தித்தேன், மாயா எனக்கு வழிகாட்டியாக நிறைய ஆலோசனைகள் கூறினார். அவரை முழுமையாக நம்ப ஆரம்பித்தேன்.
அடுத்த சில மாதங்களில் இருவரும் நெருக்கமாக பழகினோம். ஒரு கட்டத்தில் என்னை கட்டிப்பிடித்தார், முத்தமிட்டார். பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தினார் எனக்கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
முன்னதாக நடிகை மாய கிருஷ்ணன் தமிழில், தனுசின் தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விக்ரமுடன் துருவநட்சத்திரம் மற்றும் ரஜினிகாந்துடன் 2.0 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.