முகநூலில் அறிமுகமான யுவதியை கைவிட்டுச் சென்ற இளைஞன்

கொட்டதெனியாவ பிரதேசத்தில் திடீரென சுகவீனமடைந்த யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

22 வயதான இந்த யுவதியை காதலன் ஏமாற்றி விட்டு கைவிட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கல்வி கற்று வந்த இந்த யுவதியும் முகநூல் மூலம் அறிமுகமான இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

இவரும் சுமார் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். மேற்படி சம்பவம் நடப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் இளைஞர், யுவதியுடனான காதல் தொடர்பை துண்டித்துள்ளார்.

யுவதிக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக யுவதியின் தாய் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

யுவதியை பரிசோதனை செய்த போது யுவதி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து யுவதியின் தாய் கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like