வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு நீதிமன்றத்தினால் அதிரடி உத்தரவு

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினால் வவுனியா புதிய பேரூந்து நிலையம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமான தீர்ப்பு இன்று (02.11.2018) வவுனியா மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

கீழ் குறிப்பிட்ட நடைமுறை அமுலுக்கு வருகின்றது.

1.பரீட்சார்த்த நடவடிக்கையாக ஒரே இடத்தில் இருந்து இ.போ.ச வும் தனியாரும் இணைந்த நேர அட்டவனையை நடைமுறைபடுத்தி ஓட வேண்டும்.

2.யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் சகல பேரூந்துகளும் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் உள்நுழைந்து செல்லலாம்.

3.வெளி மாகாணத்தில் இருந்து வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்துக்குள் வராது நேராக செல்ல வேண்டும் என்று தற்காலிக கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4.இதே வேளை இரவு 21.00 மணியில் இருந்து அதிகாலை 03.30 மணிவரை வவுனியா புதிய பேரூந்து நிலையத்துக்குள் வெளி மாகாணங்களில் இருந்து வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பேரூந்துகள் உள் நுழைந்து செல்லலாம்.

இதனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடை முறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நீதிமன்ற நீதவான் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like