முள்ளிவாய்காலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் ரொறன்ரோ மாநகராட்சி தலைவர்

கனடா- ரொறன்ரோ நகரின் மாநகராட்சி மன்றத்தலைவர் John Tory அவர்களின் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதிக்கு சென்ற அவர் மலர்வளையம் வைத்து சுடரேற்றியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டகளத்திற்கு சென்று போராட்டம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்த விஜயத்தின்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like