வவுனியா மக்களே பண்டிகை காலத்தில் அவதானம்! பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 5000 ரூபாய் கள்ளநோட்டுகள்!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (03.11.2018) மதியம் 2.00 மணியளவில் இரண்டரை லட்சம் போலி நாணயத்தாள்களுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்களின் வழிகாட்டலில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திடீர் நடவடிக்கையின் போது 50 ஜயாயிரம் போலி நாணயத்தாள்களை (இரண்டரை லட்சம் ரூபாய்) வைத்திருந்த புத்தளம் பகுதியினை சேர்ந்த 24வயதுடைய சகுர்தீன் முகமட் சப்ராஸ் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த 50 ஜயாயிரம் நாணயத்தாள்களும் ஒரே இலக்கங்களுடன் காணப்படுவதாகவும் கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாரணைகளை தற்போது முன்னெடுத்துள்ளதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இலக்கத்தினையுடைய  94687245  ஜயாயிரம் நாணயத்தாள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You might also like