ஓமந்தையில் துப்பாக்கி மீட்பு: பொலிஸாரின் விசாரணை தீவிரம்

ஒமந்தை புதியசின்னக்குளம் பகுதியில் நேற்று ( 18.03.2017) மாலை 3.30மணியளவில் கட்டுத் துவக்கு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஓமந்தை புதியசின்னக்குளம் காட்டுப் பகுதியில் மிருகங்களை வேட்டையாட வைக்கப்பட்ட நிலையில் கட்டுத்துவக்கு ஒன்று இருப்பதை அவதானித்த பொதுமகனோருவர் உடனடியாக ஒமந்தை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கட்டுத்துவக்கினை நேற்று (18.03.2017)  மாலை மீட்டேடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

You might also like