வவுனியாவில் குத்தகைக்கு வாகனத்தினை வழங்கிய நபருக்கு நேர்ந்த கதி : பொலிஸில் முறைப்பாடு

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள வாகனத்தினை குத்தகைக்கு வழங்கும் நிலையத்திலிருந்து வாகனத்தினை பெற்றுச் சென்ற நபர் வாகனத்துடன் தலை மறைவாகியுள்ளார்.

வவுனியா குருமன்காட்டில் வாகனங்களை குத்தகைக்கு வழங்கும் நிறுவனத்தில் கடந்த 08.10.2018 அன்று நபரோருவர் தனக்கு 10தினங்களுக்கு வாகனம் குத்தகைக்கு தேவையேன தெரிவித்து வாகனத்தினை பெற்றுச்சென்றுள்ளார்.

10தினங்களின் பின்னர் வாகனங்களை குத்தகைக்கு வழங்கும் நிறுவனத்தின் முகாமையாளர் குறித்த நபரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாகனம் தொடர்பாக வினாவிய சமயத்தில் சில தினங்களில் தருவதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவரது தொலைபேசி இணைப்பினை முற்றாக துண்டித்துள்ளார்.

முகாமையாளர் கடந்த 29.10.2018 அன்று வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸில் முறைப்பாட்டினை மேற்கொண்டார். முறைப்பாட்டினை மேற்கொண்ட சில தினங்களின் பின்னர்  வாகனத்தினை குத்தகைக்கு வழங்கும் நிறுவனத்தின் முகாமையாளருக்கு பிரிதோரு நபர் தொலைபேசி மூலம் தொடர்பினை மேற்கொண்டு உங்களது வாகனத்தினை மன்னார் பகுதியினை சேர்ந்த நபரோருவர் ஈடு வைத்துள்ளார். இரண்டரை லட்சம் ரூபா பணத்தினை செலுத்தி வாகனத்தினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

பணத்தினை தருவதாக முகாமையாளர் சம்மதம் தெரிவித்ததுடன் எங்கே தருவது என குறித்த நபரிடம் வினாவிய சமயத்தில் வங்கி கணக்கிற்கு வைப்பிலிடுமாறு தெரிவித்துள்ளதுடன் அவர்கள் இருக்கும் இடத்தினை தெரிவிப்பதற்கு மறுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுப்பிரமணியம் சந்திரபோஸ் ( 783270951V) மன்னார் பகுதியினை சேர்ந்த நபரே தன்னிடம் வாகனத்தினை பெற்றுக்கொண்டதாகவும் இவருக்கு வகூனார் ரக வாகனத்தினை ( NP-CAV-7294) குத்தகைக்கு வழங்கியதாகவும் குறித்த நபர் தொடர்பான தகவல் எதேனும் கிடைத்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸார் நிலையத்தில் தெரிவிக்குமாறு வாகனத்தினை குத்தகைக்கு வழங்கும் நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.

 

 

You might also like