​வவுனியாவில் ஆறு பிள்ளைகளின் தந்தை வீட்டிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள மறவன்குளம் பகுதியில் இன்று (04.11.2018) காலை குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா மறவன்குளம் 6ஆம் ஒழுங்கையில் வசித்து வந்த விவசாயம் மேற்கொள்ளும் இராமசாமி ஜெயக்குமார் வயது 50 6பிள்ளைகளின் குடும்பஸ்தருக்கு அவரது மனைவிக்கும் இடையே நேற்று இரவு வீட்டில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து அவர்கள் வசித்து வரும் காணியில் இரண்டு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் பாவனையற்ற வீட்டில் இன்று காலை மனைவி கணவனைத் தேடிச் சென்றபோது மனைவியின் புடவையில் தூக்கில் தொங்கிய நிலையில்  சடலமாக காணப்பட்டுள்ளார்.

இது குறித்து ஈச்சங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் நேற்று இரவு தூக்கில் தொங்கியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸாருடன் இணைந்து தடவியல் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.​​

You might also like