தெருவில் இருக்கும் தாய்மாரின் கண்ணீருக்கு பதில் என்ன? இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்

வவுனியாவில் கடந்த 24ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (19.03.2017) 24ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (19.03.2017) மதியம் 2.30மணியளவில் வவுனியா மாவட்ட இளைஞர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெருவில் இருக்கும் தாய்மாரின் கண்ணீருக்கு பதில் என்ன? , அரசே காணாமல் ஆக்கப்படோருக்கு பதில் கூறு, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்… என பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்பு போராடத்தில் ஈடுபட்டனர்.