homepage side 2

கிளிநொச்சி மக்களே உஷார்! பொருட்களை வாங்கும்போது கூடுதல் அவதானம் தேவை!

கிளிநொச்சியில் பல பகுதிகளிலும் காலாவதியான மற்றும் அதிகூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்த 14 வர்த்தகர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நீதவான் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

நகரை அண்மித்த பகுதிகளில் நுகர்வோர் அதிகார சபையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது நேற்றைய தினம் குறித்த 14 வர்த்தகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதிகூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்த மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்திய குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபை வழக்கு பதிவு செய்திருந்தது.

அதிகூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்த நான்கு வர்த்தகர்களுக்கு தலா மூவாயிரம் ரூபாவும் காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்திய வர்த்தகர்களுக்கு தலா ஆறாயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

You might also like