திருகோணமலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

தமிழர் தலைநகரான திருகோணமலையின் திருக்கடலூர் பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பெண்ணொருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக திருகோணமலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like