வவுனியா பாரதி முன்பள்ளி நிலையத்தின் பாரதி கலை விழா

வவுனியா பாரதி முன்பள்ளி நிலையத்தின் பாரதி விழா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று காலை 9.00 மணியளவில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

முன்பள்ளியின் அதிபர் ஜெயராஜா சந்திரா அவர்களின் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழகத்தின் முதல்வர் த.மங்களேஸ்வரன் கலந்து கொண்டிருந்ததுடன்,

சிறப்பு விருந்தினர்களாக பிராந்திய சுகாதார பணிபணையின் தாய் சேய் நல வைத்திய அதிகாரி தா.ஜெயரதன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா ,வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபாரன் , வவுனியா கோவிற்குளம் இந்துக்கல்லூரி அதிபர் த.பூலோகசிங்கம் ,வவுனியா தமிழ்ச்சங்கத்தின் தலைவர் த.சிவகுமாரன் , அதிபர் ந.நவரட்ணம் , மற்றும் அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந் நிகழ்வில் சர்வேத மொழிப்பாடல்கள் , கண்ணன் திருவிளையாடல் நடனம் , வாய் திறக்கும் விருட்சங்கள் ,சிங்களப்பாடல் , தூங்குவோம் காவடி , பாரம்பரியத்தின் நடனம் , இணை நடனம் , பல் இசை நடனம் , பரிசளிப்பு வைபவம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

You might also like