வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஊடகவியலாளரினால் முறைப்பாடு!!

வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக இன்று (05) முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஆவா குழுவுக்கு அதரவாக துண்டுப்பிரசுரம் வினியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றத்தினால் இன்று (05) பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இம்மானுவேல் தர்சனால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா பொலிசார் தகுந்த ஆதாரங்கள் இன்றி கைது செய்து முறையற்ற விதத்தில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தமை, கைவிலங்கிடப்பட்ட நிலையில் ஏ9 வீதியில் வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து நீதிமன்றம் வரை வீதியில் அழைத்து சென்றமை, செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தியமை போன்ற செயற்பாட்டால் நான் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளேன் என தெரிவித்தும் ஊடகவியலாளராகிய என் மீது பொலிசாரினால் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்ட நிலையில் எனக்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டும் என அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like