வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மாங்குளம் வைத்தியசாலையின்  வைத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணை!!

வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மாங்குளம் வைத்தியசாலையின்  வைத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணை ஒன்று இன்று (05) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா கனகராயன்குளத்தில் பொலிசாரின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபரொருவருக்கு அச்சந்தர்ப்பத்தில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என தெரிவித்து பாதிக்கப்பட்ட பேரம்பலம் வசந்தகுமார் மற்றும் அவரது மனைவி வ.சர்மிளா ஆகியோர் வழங்கிய முறைப்பாட்டையடுத்து இன்று மாலை விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா கனகராயன்குளத்தில் முன்னாள் போராளி பே.வசந்தகுமார் குடும்பத்தினர் மீது 10-10-2018 அன்று கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் தலைமையில் சிவில் உடையில் சென்ற பொலிசார் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் பொலிசாரின் தாக்குதலில் கடுமையாக பாதிப்படைந்த பே.வசந்தகுமாருக்கு உரிய முறையில் வைத்தியர் சிகிச்சை வழங்காது பொலிசாரிடம் மீண்டும் கையளித்தமையால் தனது கணவரை கனகராயன்குளம் பொலிசார் மீண்டும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கியிருந்தனர் எனவே குறித்த வைத்திய அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்து வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இன்று விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணையின் போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் க.செந்தூர்பதிராஜா முன்னிலையாகியிருந்தார்.

You might also like