நாட்டினுடைய இராணுவத்தினர் பண்பானவர்கள்: வவுனியாவில் பிரபாகரக் குருக்கள் புகழாரம்

இந்த நாட்டினுடைய இராணுவத்தினர் பண்பானவர்கள். கௌரவத்திற்குரியவர்கள். அவர்கள் பாராட்ட பட வேண்டியவர்கள் என வவுனியா, குட்செட் கருமாரி ஆலய பிரதம குரு பிரபாகரக்குருக்கள் புகழாரம் தெரிவித்துள்ளார்.

வவுனியா கத்தசாமி ஆலயத்தில் இன்று இராணுவத்தினரும், மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.  அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஓருவருக்கு ஓருவர் அன்பு கொண்டவர்களாகவும் புரிந்துணர்வு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.  முதலிலே எங்களுடைய நாட்டினுடைய இராணுவ வீரர்கள் நிறைந்த அதை ஆரோக்கியம் கொண்டவர்களாகவும், நாட்டு பற்று கொண்டவர்களாகவும் இந்த நாட்டிற்கு உழைப்பவர்களாகவும் இருப்பதற்கும் இறைவன் அருள் ஆசி வழங்குவானாக.

இந்த நிகழ்வை திட்டமிட்ட வகையில் கலாசார நிகழ்வு, உணவு என்பவற்றை வழங்கி  இந்த இடத்தில் செய்ய முடியாது போயுள்ளது. ஆனாலும் அந்த அன்பை, புரிந்துணர்வை, மகிழ்ச்சியை இந்த ஆலய முன்றலில் நடத்த வேண்டும் என வந்த இராணுவத்தினர் மற்றும் மாவட்ட செயலகத்தினர் பாராட்டுதற்குரியவர்கள் எனத் தெரிவித்தார்.

You might also like