வவுனியாவில் ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவை தொடர்பான கலந்துரையாடல்

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியலாய கேட்போர் கூடத்தில் இன்று (19.03.2017) பிற்பகல் 3.00 மணியளவில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். பி. றோஹண புஸ்பகுமார தலைமையில் வன்னி மாவட்டம், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி மக்கள் சேவை தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜீரா அபேவர்த்தன, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கே. காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்தலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலகா, மேலதிக அரசாங்க அதிபர், வன்னி மாவட்ட பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகதர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like