ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் மல்ரிமீடியா வழங்கி வைப்பு

வவுனியா வடக்கு வலய, ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய டாக்டர். பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் வருடாந்த நிதியிலிருந்து  மாணவர்களின் பயன்பாட்டிற்கான  பல்லூடக எறிகை (மல்ரிமீடியா புரஜக்டர்) வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 13.03.2017 அன்று ஒலுமடு பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் திரு.விமலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் Dr.ப.சத்தியலிங்கம், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் திரு.பாலச்சந்திரன் சிந்துஜன், முன்னைநாள் வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் திரு.பூபாலசிங்கம், நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர், இப்பாடசாலைக்கு தேவையான மேலதிக வளங்களை கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி பெற்று கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், இப்பாடசாலைக்கு தேவையான கணணிகளை நன்கொடையாளர்கள் மூலம் பெற்றுத்தர தன்னாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

You might also like