முல்லை மண்ணில் சிறப்பாக நடைபெற்ற ”துளிர்விடும் கனவுகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாரதிதாசன் சனசமூக நிலையத்தின் வெளியீடாக பாரதி மைந்தனின் “துளிர்விடும் கனவுகள்” எனும் கவிதை நூல் நேற்று (11/11/2018) மாலை 1.30 மணியளவில் பாரதிதாசன் சனசமூக நிலைய முன்றலில் தலைவர் திரு அ.அனிஸ்ரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா நகர சபை உறுப்பினரும் வ/அல் இக்பால் ம.வி ஆசிரியருமான கௌரவ சுந்தரலிங்கம் காண்டீபன், சிறப்பு அதிதிகளாக டான் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி பணிப்பாளர் பண்பலை வேந்தன் ரி.எஸ்.முகுந்தன் , புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு குலசிங்கம் விக்ரர் ஜெயசிங்கம் , புதுக்குடியிருப்பு இளைஞர் சேவை அதிகாரி திரு அ.விஜிதரன் மற்றும்

கௌரவ அதிதிகளாக கவிஞர் தர்மலிங்கம் பிரதாபன் , இசைக்கனல் பி.எஸ்.விமல், ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீசன், புவனேசன் அணிநிலவன், தமிழ் சிறகுகள் அமைப்பின் பிரதிநிதி க.துவாரகன்,  இளம் அறிவிப்பாளர் கே.சுரேன், இளம் நடிகர் அ.தினேஷ் , வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன், முல்லைத்தீவு இளைஞர் கழக சம்மேளன தலைவர் முறிகண்டி லக்சிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

கிராம மக்களின் அமோக ஆதரவுடனும் கலை இலக்கிய சமூகங்களின் பெரு ஆதரவுடனும் விழா சிறப்புற நடைபெற்றது.

You might also like