இலங்கையில் நடைபெறும் அதிகார மாற்ற அரசியலின் பின்னணி என்ன?

‘நாடாளுமன்றத்தை கலைத்தல்’ என்றஒற்றை இலக்கினை வைத்தே, பிரதமர்மாற்றம் உட்பட புதிய மந்திரிசபைஉருவாக்கம் என்பதெல்லாம் திட்டமிட்டுநடத்தப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில்மகிந்தாவின் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனாவிற்கு சிங்கள மக்கள்மத்தியிலிருந்து கிடைத்த பேராதரவு,நாடாளுமன்றத்தைக் கலைத்தல் என்கிறமுடிவினை எடுக்க வைத்துள்ளதுபோலுள்ளது.

இந்த அரசியல் மாற்றத்தினை மைத்திரியும்உணர்ந்துள்ளார்.

அடுத்த சனாதிபதி தேர்தலிலும் தானேவேட்பாளர் என்பதை உறுதிப்படுத்தியபின்னரே இந்த சிக்கலான யாப்புக்குளறுபடி முடிவினை மைத்திரிஎடுத்திருப்பாரென ஊகிக்கலாம்.

கொலை முயற்சிக் கதையெல்லாம், தமதுநகர்வுகளுக்கு நியாயம் கற்பிக்கமைத்திரியார் மேற்கொண்ட புனைவுகளே.

‘நல்லாட்சி’ அரசில் ஓரங்கட்டப்படுவதால்,தனது அரசியல் எதிர்காலம் பூச்சியமாகும்என்கிற அச்சமும் மைத்திரிக்கு ஏற்பட்டுள்ளது.

அரச நிர்வாக மட்டத்தில், நல்லாட்சிப்பங்காளிகளான ஐக்கிய தேசிய முன்னணிசெலுத்தும் செல்வாக்கு பலமடையும்அதேவேளை, அடுத்த சனாதிபதி தேர்தலில்ரணில் இறங்குவார் என்று மைத்திரிஎதிர்பார்க்கிறார்.

‘இந்த முறை நீங்கள்..அடுத்தமுறைநாங்கள்’ என்று மைத்திரியிடம் ரணில்கூறியதாகவும் தகவல் உண்டு.

‘சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கி,ரணிலை சனாதிபதியாக்கும்நிகழ்ச்சிநிரலில் தனக்கென்ன வேலை’என்று மைத்திரி நினைத்திருக்கவாய்ப்புண்டு.

மகிந்தர் ஆட்சிபீடம் ஏறிய காலத்தில்சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரமோதல், 2015 இல் பூதாகரமாகி, சந்திரிகாஅனுசரணையில் ‘நல்லாட்சி’ அரசுஉருவாக வழி வகுத்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்செயலாளராக இருந்த மைத்திரிபாலசிறிசேனாவை பிரித்து, இரணிலோடுஇணைத்த விவகாரத்தின் பின் புலத்தில்மேற்குலகும் இந்தியாவும் தொழிற்பட்டனஎன்பதை மகிந்தர் இலகுவில் மறக்கமாட்டார்.

மகிந்தரின் கோபத்தைத் தணிக்கவே,அவரின் புலி எதிர்ப்பு நண்பன் சுப்ரமணியசுவாமியை தூதுவிட்டது இந்தியா.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து மகிந்தர் உட்பட 28முன்னாள் எம்பிக்கள் , ஜி.எல்.பிரீஸைத்தவிசாளராகக் கொண்ட ஸ்ரீலங்காபொதுஜன பெரமுனாவில் இணைந்துகொண்ட விவகாரம், பல திருப்பங்களைகொழும்பு அரசியல் மட்டத்தில்ஏற்படுத்துமென எதிர்பார்க்கலாம்.

பண்டாரநாயக்க குடும்பத்தினரின் அரசியல்ஆதிக்க சக்தியாகத் திகழும்சுதந்திரக்கட்சியை பிரதியீடு செய்யும்வகையில், பொதுஜன பெரமுன கட்சியைஉருவாக்கி வளர்த்தெடுத்த ராஜபக்சஅணியினர், தற்போது வெளிப்படையாகஅதில் இணைந்து கொண்டுள்ளனர்.

பண்டாரநாயக்க அரசியல் சகாப்தத்தைசெயலிழக்கச் செய்து, புதிய நவீனஇராஜபக்ச சகாப்தத்தைநிர்மாணிப்பதுதான் மகிந்தரின் பேராசை.

இத்தகைய அணி மாற்றங்கள் மற்றும் புதியஅணி சேர்ப்பினூடாக, இரு துருவ அரசியல்நிலை மீண்டும் இலங்கையில்ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

நாடாளுமன்றக் கலைப்பிற்கு எதிராகஉயர்நீதி மன்றில் தொடுக்கப்படும்வழக்குகள், மைத்திரி-மகிந்த அணிக்குச்சார்பான அல்லது எதிரான தீர்ப்பினைவழங்கினாலும் பெரிய மாற்றமேதும்நிகழப்போவதில்லை.

சமாதான காலத்தில் சந்திரிகாவும் ரணிலும்தத்தமது பதவிகளை வகித்தது போலவேஅது இருக்கும்.

அதேவேளை ஆட்சி மாற்றம் பாகம் 1இனை அரங்கேற்றிய அதே வல்லரசுகள்,மீண்டும் பாகம் 2 இனை நிகழ்த்திட, மகிந்தகுடும்பத்தில் உடைவினை ஏற்படுத்திடமுயற்சிக்கலாம்.

ஆனால் அதற்கொரு சந்திரிக்கா தேவை.

அவர் தந்தையின் சுதந்திரக் கட்சியைஇலைகளற்ற வெற்றுக்காம்பாக மாற்றும்கைங்கரியத்தை மகிந்த அணியினர்நிகழ்த்திக் கொண்டிருப்பதால், சந்திரிகாவின் மீள்வருகை பிரயோசனமற்றதெரிவு என்பதை ஆட்சி மாற்றஇயக்குனர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

வடக்கு கிழக்கிலோ, மேற்குறிப்பிடப்பட்டஎந்த தென்னிலங்கை அரசியல்மாற்றங்களையும் உள்வாங்காமல்வேறொரு அரசியல் தடகளப்போட்டி நடைபெறுகிறது.

அந்த மும்முனைப்போட்டியில்தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு,விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணிமற்றும் அரச-அரச சார்பு அணிகள் மோதிக்கொள்ளும்.

கஜேந்திரகுமாரின் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி தனித்து நின்றால், போட்டியில்ஈடுபடும் அணிகள் நான்காக மாறும்.

இதயச்சந்திரன்

தவறி விழுந்த விதையே முளைக்கும் போது 
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை சிறக்காதா என்ன?

https://youtu.be/1o9XQgByNB8

You might also like