கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர்களுக்கான விடுதி திறந்து வைப்பு
உள்நாட்டு அளுவல்கள் அமைச்சின் நிதி உதவியில் கிளிநொச்சி திருநகர்ப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான குடும்ப விடுதி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆறு அரச உத்தியோகத்தர்கள் அவர்களது குடும்பத்தினருடன் வசிப்பதற்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் கிளிநோச்சி மாவட்ட அரசாங்க அதிபர் , முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பல அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.