வவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி மன்றம்

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று தமிழ் தாய் இளைஞர் கழகத்தின் வேண்டுகோளுக்கினங்க வன்னி மண் நற்பணி மன்றத்தினால் ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் 10 குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழ் தாய் கழகத்தின் தலைவர் வ.பிரதீபன், வன்னி மண் நற்பணி மன்றத்தின் தலைவர் மயூரன் , அவ் கிராமத்தின் கிராம சேவையாளர் ப.பிரதீப் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like