முல்லைத்தீவில் அம்பியூலன்ஸ் வண்டியில் மோதி பெண்ணொருவர் பலி

முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியின் உடுப்புக்குளம் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்கிளாய் பிரதேசத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற அளம்பில் வைத்தியசாலைக்கு சொந்தமான

அம்பியூலன்ஸ் வண்டியில் எதிர் திசையில் இருந்து வந்த சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உடுப்புக்குளம் உப்புமாவேலி என்ற முகவரியை சேர்ந்த 57 வயதான தங்கவடிவேல் தர்மசீலம் என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like