வகுப்புகளுக்கு செல்வதாக கூறி திரையரங்கிற்குச் சென்ற பாடசாலை மாணவர்கள் கைது

கம்பஹா பிரதேசத்தில் உள்ள சினிமா திரையரங்குகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 48 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பகுதி நேர வகுப்புகளுக்கான கம்பஹா நகருக்கு வந்திருந்த பாடசாலை மாணவ, மாணவிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொலிஸார் இந்த தேடுதலை மேற்கொண்டனர்.

பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதாக கம்பஹா நகருக்கு வந்து திரையரங்குகளுக்கு சென்று ஒழுக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டிருந்த போது பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

You might also like