உச்சநீதிமன்றத்தில் உச்சக்கண் ஆட்டம்! கைக்குவெட்டு! -மொட்டுக்கு லாபம்!

இலங்கைத்தீவின் உள்ளேயும் வெளியேயும் அதிதீவிர குழப்பங்கள் நிலவுகின்றன. அந்தத்தீவின் உள்ளே அதிதீவிர அரசியல் குழப்பங்கள் நிலவுவதைப்போலவே அதனை வெளிப்பரப்பு வளிமண்டலமும் கஜா என்றபுயலாக அதிதீவிரக்குழப்பத்தில் உள்ளது.

கஜா புயல் இப்போது இலங்கைத்தீவின் தலைக்கு வெளியே வலமிருந்து இடமாக சுழன்றுநகரும்நிலையில் சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தை மையப்படுத்திஅந்தத்தீவின் அரசியல்குழப்பங்களின் மையப்புள்ளிசுழல்கின்றது

மைத்திரி கடந்த வெள்ளியன்று எடுத்தமுயற்சியின் பலன் பலிக்குமா பலிக்காதா என்ற இழுபறியுள்ள நிலையில் அதற்குரிய விடையை வழங்க வேண்டிய பொறுப்பும் இப்போது சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் முன்னால் உள்ளது.

சிறிலங்கா உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு நீதிமன்றமாக அவ்வப்போது அவதாரம் எடுப்பதால் இந்தப்பொறுப்பு அதற்கு இருப்பதால் எல்லோர் கண்களும் இப்போதுஉச்சநீதிமன்றவளாகத்தின் மீதேயுள்ளது.

ஆனால் இந்த மனுக்களுக்குரிய விடையைஉச்சநீதிமன்றம் உடனடியாக வழங்குமா? அதற்கு அது எவ்வளவு காலம் எடுக்கும் என்பதும் இங்கு முக்கியமானது.

கடந்தவெள்ளியன்று மைத்திரியால் சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஒன்றல்ல இரண்டல்ல 17 அடிப்படை உரிமை மனுக்கள் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அரசியல்கட்சிகளும் குடிசார்அமைப்புக்களும் ஏன் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து ரத்னஜீவன் ஹ_ல் போன்றமுகங்களும் வரிசைகட்டி இவற்றை திபு திபுவென தாக்கல் செய்திருந்தன.

எல்லா மனுக்களின் மையப்புள்ளியும் நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிராக நீதிகோருவதால் இவற்றின் மீதான விசாரணை பிரதமர் நீதியரசர் நளின்பெரேரா தலைமையில் 3 நீதியரசர்கள் நடத்திவருகின்றனர்.

இன்றைய விசாரணையின் ஒருகட்டத்தில் சிறிலங்கா சட்ட மா அதிபரால், கால அவகாசம் கோரப்பட்டதால் இந்த மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது.

ஆகமொத்தம் மஹிந்த பிரதமராக நியமிக்கட்ட நகர்வு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நகர்வுவரை மைத்திரியின் அண்மைய நகர்வுகள் உள்ளுரிலும் அனைத்துலக அரங்கிலும் கடும்விமர்சனத்தைப்பெற்றுள்ளன.

இந்தநிலையில்; நேற்றிரவு மீண்டும் ஒரு முறை நாட்டுமக்களுக்காக தொலைக்காட்சியில்தோன்றிய மைத்திரி தனது அண்மைக்கால நகர்வுகளை நியாயப்படுத்தி உரையாற்றினார்.

ஆனால், அத்தனையும் செய்தாள் உப்பிட மறந்தாள் என்பதுபோல2015 ஏப்ரல் 28லேயே 19ஆவது திருத்தம் என்ற அரசியலமைப்பு மாற்றம் இடம்பெற்ற நகர்வை அவர் மறந்துவிட்டார்.

ஏனெனில் 2015 ஏப்ரலில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தத்தில் அரசதலைவரின் நிறைவேற்று அதிகாரங்களில் சில மட்டுப்படுத்தப்பட்டன.

அதில் ஒன்று பிரதமரை நீக்கும் அதிகாரம் இல்லாமல் ஆக்கப்பட்டமை

அதேபோல நாடாளுமன்றத்தைக்கலைக்க அரசதலைவருக்கு உள்ள அதிகாரத்திலும் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

அதாவது நாடாளுமன்றம் அதன் முதல்கூட்டத்தை நடத்திய நாளில் இருந்து நான்கரை ஆண்டுகளுக்குக்குறையாத காலப்பகுதி நிறைவடையும் வரை,

இல்லையென்றால் நாடாளுமன்றத்தைக்கலைக்கும்படி அதன் மொத்த எண்ணிக்கையில் மூன்றிலிரண்டுக்கு குறையாத எண்ணிக்கையுடைய உறுப்பினர்கள் கோரும் வரை அரசதலைவர் நாடாளுமன்றத்தைக் கலைக்கமுடியாது என்பதே இந்தமாற்றம

இந்தநிலையில் தற்போதைய நாடாளுமன்றம் தனது காலப்பகுதியில் 3 ஆண்டுகள் 2 மாதங்களும் 8 நாட்கள் மட்டுமே கடந்த நிலையில் அது கலைக்கப்பட்டுள்ளது. இந்தநகர்வுதான் மைத்;திரியின் அரசியலமைப்பு மீறல் குறித்த சட்டவாதங்களை பலமாக எழுப்பியுள்ளது.

ஆனால் மறுபுறத்தே மைத்திரிவாதிகளும் மகிந்தாவாதிகளும் தமது தரப்பின் நகர்வு சரியானதெனவே சகட்டுமேனிக்கு பல்லவிபாடுகின்றனர்.

இதற்காக அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையை தமக்கு தோதாகவும் அவர்கள் வலிந்து இழுக்கின்றனர்

அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரைப்பிரிவில் பிரிவில் எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உரிமை அரசதலைவருக்கு உள்ளதாக இவர்கள் கூறுகின்றன. ஆனால் அரசியலமைப்பின் 70வது உறுப்புரையை விட உறுப்புரை 33 முக்கியமானதென்பதை மறந்து விடுகின்றனர்.

அப்படியானால் ஏன் மைத்திரி இதனைச்செய்தார். ஒருவேளை தான் எடுத்தநகர்வு சட்டரீதியில் ஒரு சவாலை சந்திக்குமென எதிர்பார்த்துத்தான் மைத்திரி இதனை நகர்த்தினாரா?

சிலவேளைகளில் இதில் காரணம் அல்லது கரணம் இருக்கலாம். ஒருவேளை தற்போது தாக்கல் செய்யபட்டுள்ள வழக்குகளில் சாதகம் அல்லது பின்னடைவுகிட்டினாலும் அவற்றில் பலன் இருக்கும் என மைத்திரி நினைக்கலாம்.

நாடாளுமன்றகலைப்புக்கு முன்னால் இருந்த நிலவரப்படிநோக்கினால் நாளை மறுதினம(;14)மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டும்.

அவ்வாறு கூட்டப்படும் நாடாளுமன்றத்தை மீண்டும் ஒத்திவைத்து(ரணிலை பிரதமராக்கவிடாமல்) விமர்சனத்தை எதிர்நோக்காமல் இந்தகாலஅவகாசத்தை நாடாளுமன்றத்தை கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எடுக்கபடும் நகர்வுகள் ஊடாக ஒரு கால அவகாசத்தை பெற்றுக்கொள்ளும் நுட்பமும் இதில் இருக்ககூடும்.

ஆனால் மைத்;திரியின் இந்த நகர்வால் ஏற்கனவே இலாபமடைந்தது லாபமடைவது…. இனியும் லாபமடையபோவது சாட்சாத் மகிந்தவாக இருக்கக்கூடும்.

சிறிலங்கா பொதுஜனபெரமுன எனப்படும் தாரைமொட்டை மையப்படுத்தி மஹிந்தஅணிஎடுக்கும் துரிதநகர்வுகளும் சிறிலங்கா சுதந்;திரக்கட்சிஉறுப்பினர்கள் அதில் இணைய எடுக்கும் ஆர்வமும் இதற்கு ஆதாரம் இது மைத்திரிக்கு சவாலானது.

நேற்று மகிந்த சிறிலங்கா பொதுஜனபெரமுனவில் இணைந்ததும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்த பலது தமது சொந்தக் கையை வெட்டியாடி தாமரை மொட்டுக்கு பாய்ந்தனர். இது மைத்திரிக்கு ஒரு அதிர்ச்சிவைத்தியம் இதனால் அவரும் தனது அரசியல் அனாதைநிலையை தவிர்க்க வேறுவழியின்றி மொட்டுடன் சமரசம் செய்யவேண்டிய நிலையொன்று உருவாகியுள்ளது.

இதனால்தான் சுதந்திரக்கட்சியை கட்சியை மீண்டும் கட்டியெழுப்பபோவதாக சந்திரிக்கா களமிறங்கியிருக்கிறார் ஆகமொத்தம் எல்லா களங்களும் இலங்கைத்தீவை கலங்கடிக்க வைக்கின்றன.

பொது எழுத்தாளர் Prem

You might also like