வவுனியாவில் நீதிமன்ற உத்தரவினையும் மீறி தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு

வவுனியாவில் 87 வழிப்பயண தனியார் பேரூந்துகள் இன்று (14.11.2018) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இ.போ.சவும் தனியாரும் இணைந்த நேர அட்டவனையை நடைமுறைபடுத்தி தங்களது சேவைகளை மேற்கொள்ள வேண்டுமேன கடந்த 02.11.2018ம் திகதி வவுனியா நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படடிருந்தது.

தீர்ப்பினையடுத்து கடந்த 6ம் திகதியிலிருந்து தனியார் மற்றும் இ.போ.ச பேரூந்துகள் இணைந்த நேர அட்டவணையின் பிரகாரமே சேவையில் ஈடுபட்டு வந்தனர்.

இந் நிலையில் இன்றைய தினம் 87 வழிப்பயண தனியார் பேரூந்துகள் தங்களுக்கு வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதற்குறிய நேரம் போதாமையாக (20 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது) உள்ளதாக தெரிவித்து வவுனியாவிலிருந்து 87 வழிப்பயணப்பாதையினால் கொழும்பு நோக்கி பயணிக்கும் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் (87வழிப்பயணம்) சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like