மென்பந்து சுற்றுப்போட்டியில் நியூசன் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது

வவுனியா நெளுக்குளம் சாம்பல் தோட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (19.03.2017) இடம்பெற்ற மலைமகள் விளையாட்டு கழகம் (Mcc) விளையாட்டு கழகம் ஏற்பாட்டில் அணிக்கு 6பேர் கொண்ட  மென்பந்து சுற்றுப்போட்டியில் நியூசன் விளையாட்டுக்கழகம்  போட்டியின் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளனர்

இறுதி போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசன் அணியினர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 65 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கிய தனுசன் மற்றும் அருளானந் 62 ஓட்டங்களை ஆரம்ப அதிககூடிய இணைப்பாட்டமாக இவ்மைதானத்தில் பதிவுசெய்தனர் மேலும்
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Mcc அணியினர் ஆரம்பத்திலிருந்தே நியூசன் அணியினரின் பந்திற்கு நெருக்கடிகளை கொடுத்த போதும் வசிகரன் மற்றும் செல்வா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளால் 23 ஓட்டங்களால் நீயூசன் அணியினர் வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளனர்

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 29 பெற்ற அருளானந் பெற்றதுடன்
தொடர் ஆட்டநாயகனாக 72 ஓட்டங்களை பெற்ற தனுசன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்

மேலும் இப்போட்டிகளில் 26 இற்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like