20 வயது இளம் பெண் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை
அவிசாவளையில் இளம் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாஹெல்லவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பலங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண் ஒருவரே நேற்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண் அவிசாவளை ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக சேவை செய்துள்ளார் என கூறப்படுகின்றது.
நீண்ட காலமாக காணப்பட்ட காதல் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தகராறு கொலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.