வீட்டின் தூண் சரிந்து விழுந்து சிறுவன் மரணம்

மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் கல்லடிப்பகுதியில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டின் தூண் சரிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரியாவெளி கிராமத்தினை சேர்ந்த சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்த சிறுவன் மட் /சிவானந்த வித்தியாலயத்தில் 7ஆம் ஆண்டில் கல்வி பயின்றுகொண்டிருந்த சீதாரலிங்கம் ரக்சிதன்(12) என திடீர் மரணவிசாரணை அதிகாரி அ.கணேசதாஸ் தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like