மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுதி கையளிப்பு

முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளின் நலன் கருதி முப்பது மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட விடுதி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாணவிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் விமல் ஜயரட்னம் அவர்களின் நிதி பங்களிப்பில்  கல்வி வளர்ச்சி அறக்கட்டளையினால் குறித்த விடுதி அமைக்கப்பட்டு மாணவிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கற்றல் கூடம், சமையல் அறை, விருந்தினர் அறை, நவீன வசதிகளுடனான குளியலறை, மற்றும் தங்கும் அறைகள் என பல வசதிகளுடன் குறித்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் சுமாh அறுபது மாணவர்கள் தங்கியிருந்து கற்க கூடிய வசதிகள் காணப்படுகிறது.

ராஜ் அகம் என அழைக்கப்படும் குறித்த விடுதியானது மிகவும் பொருத்தமன இடத்தில் அமைக்கப்பட்டுள்ளமை பிரதேச மக்கள் மத்தியிலும், கல்விச் சமூகத்தின் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக கல்வி வளர்ச்சி அறக்கட்டளை, மற்றும் மருத்துவர் விமல் ஜயரட்னம் ஆகியோருக்கு பெற்றோரும் மாணவர்களும் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

You might also like