வவுனியா வர்த்தக சங்கம் எடுத்துள்ள மற்றுமோரு அதிரடி நடவடிக்கை

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் நிர்ணைய விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தையல் கடை உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் வவுனியா வர்த்தக சங்கத்தின் கட்டிடத்தில் இன்று (18.11.2018) காலை இடம்பெற்றது.

வவுனியா வர்த்த சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களின் தலமையில் இடம்பெற்ற இவ் விசேட கலந்துரையாடலின் போது அனைத்து தையல் கடை உரிமையாளர்களும் ஒன்றினைந்து தங்களுக்குரிய நிர்ணைய விலையினை நிர்மாணித்துள்ளனர்.

அத்துடன் புதிதாக ஒரு விதிமுறையினையும் நடைமுறைக்கு கொண்டு வந்தனர். அதாவது வேறோறு தையல் நிலையத்தில் பணிபுரிந்து விட்டு அங்கிருந்து பணிவிலகி இன்னோரு தையல் நிலையத்திற்கு பணியாற்ற செல்லும் சந்தர்ப்பத்தில் முன்னர் பணிபுரிந்த இடத்தில் குறித்த ஊழியர் பணிவிலகினதுக்குரிய காரணத்தினை கேட்டறிந்த பின்னர் பணிக்கு அமர்த்த வேண்டும் என்பதே ஆகும்.

வவுனியா நகரில் அமைந்துள்ள சைவ மற்றும் அசைவ உணவகங்களின் விலை நிர்ணையம் தொடர்பாக கலந்துரையாடலும் நேற்று மற்றும் நேற்று முன்தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் நிர்ணைய விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கோடு வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தகர்களையும் பிரிவு பிரிவாக விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்கள் மூலம் நிர்ணைய விலையினை பரிசிலித்து அவர்களது விலைப்பட்டியலை வவுனியா மாவட்ட செயலக கட்டிடத்தில் இயங்கும் நுகர்வோர் அதிகார சபை அலுவலகத்தில் ஒப்படைத்து அவர்கள் மூலம் நடைமுறைக்கு கொண்டுவருதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அத்துடன் விலைப்பட்டியல் அனைத்து வர்த்தகநிலையத்திலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையினையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

 

 

You might also like