யுவதியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்த நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்
புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்து தப்பிச் செல்ல முற்பட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகனத்தில் வந்த இருவரே குறித்த பெண்ணின், தங்கச் சங்கிலியை பறித்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையிலேயே பொலிஸார் சந்தேகநபர்கள் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.