சற்று முன் வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் பதட்டம் : பொலிஸார் குவிப்பு

வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து இன்று (20.03.2017) பிற்பகல் 3.30மணியளவில் கைக்குண்டின் சிதறல் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா தாண்டிக்குளம் பிறமண்டு பாடசாலையிலிருந்து இன்று (20.03.2017) காலை 9.00 மணியளவில் பாடசாலையில் மாணவர்கள் வகுப்பறைக்கு முன்பாக சிறிய மதில் அமைப்பதற்காக கிடங்கு வெட்டியபோது அதற்குள் வெடிகுண்டின் வெடித்த பகுதி துண்டுகள் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து பாடசாலை நிர்வாகத்தினால் வவுனியா குற்றத்தடுப்பு  பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் இன்று (20.03.2017) பிற்பகல் விசாரணைகளை மேற்கொண்டதுடன் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு இன்று மாலை பாடசாலைக்கு சென்ற விஷேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் மேலும் கிடங்குகளை அகலமாக தோண்டியபோதும் அதற்குள் வெடித்த வெற்றுத்துண்டுகள் மீட்கப்பட்டதுடன் ஆபத்துக்கள் எதுவும் இல்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட கைக்குண்டின் சிதறல் துண்டுகளை விஷேட அதிரடிப்படையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

இவ் பாடசாலை வளாகத்தினுள் கடந்த யுத்தகாலத்தில் இரானுவ முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like