வவுனியாவில் தமிழ் மாமன்றம் நடாத்தும் வன்னியின் வாதச்சமர் இறுதிப்போட்டி  – 2018

தமிழ் மாமன்றம் நடாத்தும் வன்னியின் வாதச்சமர் 2018  இறுதிப்போட்டிகள் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் இன்று (20.11.2018) காலை 9.30மணிக்கு  ஆரம்பமாகி தமிழ் மாமன்றத்தின் தலைவர் கு.அனுஜன் தலமையில் நடைபெற்று வருகின்றன.

வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ரீதியில் போட்டிகள் இடம்பெற்று அவற்றிலிருந்து மாவட்ட ரீதியில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி , மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம் , முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரி  இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டன.

மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைக்களுக்கிடையே தற்போது இறுதிச்சுற்றுப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இவ் போட்டியின் நடுவர்களாக தாலிக்குளம் மாகா வித்தியாலயத்தின் ஆசிரியர் கா.பிரதீஸ் , சட்டத்தரணி லோ.அருணியா ,வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் செ.மதுரகன் , சின்னப்பூவரசன்குளம் விக்கினேஸ்வரா மாகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தெ.துர்க்காயினி , உள சமூக சேவையாளர் ஆ.ஜெசிதா , ஆசிரியர் ஜ.கதிர்காமசேகரன் , மென்பொருட் பொறியியலாளர் ச.கஜன் ஆகியோர் அங்கத்துவம் வகித்தனர்.

நிகழ்ச்சி தொகுப்பினை தமிழ் மாமன்றத்தின் பொருளாளர் கு.சிரஞ்சீதன் வழங்கி வருவதுடன் பார்வையாளர்களாக பெற்றோர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

You might also like