நாடாளுமன்றத்துக்கு வந்தார்கள்…சென்றார்கள்! ஒவ்வொருஅமர்வுக்கும் 25 மில்லியன் ரூபாய் கரி

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள இந்த பேஜ் ஜ லைக் செய்யுங்கள்

இலங்கைத்தீவின் புரையோடிய தமிழ் சிங்கள இனமுரண்பாட்டுத்தளத்தின் மையப்புள்ளியான தமிழினத்தின் மீதான நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியல் ஒடுக்குமுறைக்கு அப்பால் என சில தனித்துவப்பதிவுகள் உள்ளன.

உலகின் முதலாவது பெண் பிரதமரை தெரிவுசெய்த நாடு.ஆசியாவில் முதன் முதலாக ஆண்பெண் ஆகிய இருபாலாருக்கும் வாக்குரிமை வழங்கிய நாடு. ஆசியாவில் முதலில் வானொலிஒலிபரப்பை ஆரம்பித்த நாடு.

என சில தனித்துவப் பட்டியல்கள் இருக்கும் இந்த நாட்டுக்கு இப்போது உலக நாடாளுமன்றங்களில் முதன்முதலாக மிளகாய் தூள் கரைசலை ஊற்றிய ஒரு நாடாளுமன்ற அரங்கத்தைக் கொண்ட நாடு என்ற இன்னொரு பெருமை பதிவும் கடந்தவாரத்தில் இருந்த வந்துசேர்ந்துள்ளது

ஆனால் இவ்வளவையும் செய்திட்டோம் ? இதை செய்யமாட்டோமா என்ற கோதாவில் மிளகாய்கரைசல் எப்படி நாடாளுமன்றத்துக்குள் வந்தது என்பதற்கு மகிந்தாவாதியான பந்துலகுணவர்த்தனா இப்போது ஒரு அக்மார்க் கண்டுபிடிப்பை கண்டுபிடித்துவிட்டார்.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தின் பார்வையாளர் அரங்கில (கலரி) இருந்துதான் மிளகாய்க்கரைசல் ஊற்றப்பட்டதான கண்டுபிடிப்பு ஒன்றைகண்டு பிடித்த பந்துல குணவர்த்தனா அத்துடன் உபரி இணைப்பாக நாடாளுமன்றப்பார்வையாளர் அரங்கிலிருந்து இனி தற்கொலைத்தாரிகளும் வந்துவிடுவார்கள் என்ற கிலிக்கதையை புலிக்கதையாகவும் சொல்ல முனைந்தார்.

தற்போது நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பலியாகும் வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் மஹிந்தஅமரவீர தெரிவித்த நிலையில் நாடாளுமன்ற பார்வையாளர் அரங்கிலிருந்து இனிதற்கொலைத்தாரிகளும் வந்துவிடுவார்கள் என்ற கிலிக்கதையை பந்துல பந்தாக அடித்துள்ளார்.

ஆகமொத்தம் பிரச்சனையின் மைய்யப்புள்ளியை துல்லியமாக அறிந்தாலும் அதனை அறியாதவர்கள் போல மஹிந்த அமரவீர பந்துல குணரட்ணா போன்ற வகையறா தொகையறாக்கள் கருத்துக்கூறலாம்.

இவ்வாறான கருத்துக்கந்தசாமிகளின் கடும்போக்கு நிலைப்பாடுகள் தான் இன்றும் நாடாளுமன்றத்தை5 நிமிடங்கள் மாத்திரம் நீடிக்கவைத்து எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

ஒப்பீட்டுரீதியில் நோக்கினால் நாடாளுமன்றத்தில் கடந்த 4 முறை இடம்பெற்ற அமர்வுகளைவிடஇன்றைய அமர்வில் குஸ்திகள் மற்றும் அமளி துமளிகள் குறைவு. ஆனால் தொடர்ந்தும் அமர்வை நடத்தியிருந்தால் அவ்வாறான குஸ்திகளும் மற்றும் அமளி துமளிகளும் மீண்டும் நிச்சயமாவே இடம்பெற்றிருக்கும். அதில் ஐயமேதும் இல்லை.

ஆனால் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அமர்வுக்கும் செலவாகும் தொகை சுமார் 25 மில்லியன் ரூபாய் கடந்தவருடம் மட்டும் நாடாளுமன்ற அமர்வுகளின் செலவீனமே 2.57பில்லியன் ரூபாய்

உதாரணமாக கடந்த 4 அமர்வுகளிலும் மொத்தம் 10 கோடி ரூபாய் விரயமாகி விட்டது. இது யாருடைய பணம்? மக்களின் வரிப்பணம் என்ற யதார்த்தம் அரங்கில் மல்யுத்தம் புரிந்து அதனை சேதப்படுத்தும் எத்தனை உறுப்பினர்களுக்குத்தெரியும்?

இதற்கிடையே சபாநாயகர் கருஜயசூரிய, சபைக்கு இன்று நாடாளுமன்ற அரங்குக்கு வராத நிலையில் அதனை பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி வழிநடத்தியிருக்கிறார்.

மகிந்த தரப்பு தமது பலவீனத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில் இந்தப்பிரச்சனை நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்ற புதிய புள்ளிக்குமாறி இழுபறிப்பட்டுக்கொள்கின்றது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பெரும்பான்மைபாகம் தமது அரசாங்கத்துக்குத் தேவையென மகிந்ததரப்பு வாதிட அதனைஎதிர்க்கும் ஜே.வி.பி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத தரப்புக்கு நாடாளுமன்றத்தெரிவுக்குழுவின் பெரும்பான்மை வகிபாகத்தை பெற்றுக்கொள்ள முடியாதென கூறுகிறது.

ஆக மொத்தம்; எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும் எதிர்வரும் வெள்ளியன்று என்ன நடக்கும்? அதற்கிடையில் ஏது நடக்கும் என்பதே இங்கு முக்கியமானது.

ஆனால் ஒரு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருப்பிக்கும்; தரப்புக்கே அரசாங்கத்தை உருவாக்கும் தகுதிஇருக்கின்றது என்ற அடிப்படையை புறந்தள்ளும் மகிந்ததரப்பு மாறாக கீறல்விழுந்த இசைத்தட்டுப்போல அமைச்சரவையை அல்லது பிரதமரை நியமிக்கவோ அல்லது அரசாங்கத்தை கலைக்கவோ சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை. அரசியலமைப்பின் அடிப்படையில் அரசதலைவருக்கே அதற்கு அதிகாரம் உள்ளதென பல்லவிபாடுகிறது.

இவ்வாறான ஒரு நிலையில் நேற்று மைத்திரி நடத்திய அனைத்து கட்சி சந்திப்பின் நோக்கம் சிக்கல்களுக்கு தீர்வுதருவதாக இல்லை மாறாக நாடாளுமன்றத்தெரிவுக்குழுவின் பெரும்பான்மைப்பெற்றுக்கொள்வது எந்தத்தரப்பு என்ற புதியஇழுபறியை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்றத்தைத் தொடர்ச்சியாக நிலைகுலையச் செய்வது மோடிசடியான ஆவணத்தயாரிப்பு உட்பட்ட சில காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, சபாநாயகர் கருஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு, மகி;ந்தாவாதிகளின் ஆலோசனை ஒரு புறம்இடம் பெறுகின்றது.

இதற்கு பக்கவாட்டாக ஜெனிவா மனித உரிமை அரங்கில் தமிழர் தரப்பை அச்சுறுத்தும ரியர்; அட்மிரல் சரத் வீரசேகரவின் நகர்வு இன்று இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானமானது, சட்டவிரோதமானதென அறிவிக்குமாறு உசச்நீதிமன்றில் இவரது தரப்பால் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கலைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த நடவடிக்கை நாடடின் அரசியலமைப்பை மீறியுள்ளதாக ரியட் அட்மிரல் சரத் வீரசேகர குழாம் கூறுகிறது

அதேபோல மறுபுறத்தே நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை ஏற்றுக்கொள்ளாமல், அரசியலமைப்பு மற்றும் நிலையியல்கட்டளைகளை சவாலுக்குட்படுத்தும் வகையில் மைத்திரிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவருவதற்கு, ஐக்கிய தேசிய முன்னணி எடுக்கும் நகர்வுகள் மறுபுறமும் செல்வதாக தெரிகின்றது.

அதாவது நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் மூலமாகத் தோற்கடிக்கப்பட்ட நபரை, பிரதமராக ஏற்றுக்கொண்டது அரசியலமைப்புக்கு முரணானது என்பதால், மைத்திரிமீது இந்த குற்றப்பிரேரணையை வீசியெறிய ஐக்கிய தேசிய முன்னணி முயல்கிறது.

ஆகமொத்தம் சிறிலங்காவின் அரசியல்வாதிகளின் சளைக்காத ஆட்டம் தொடர்கிறது ஆனால் இலங்கைத்தீவுதான் அரசியல் முடக்குவாதத்தில் வீழ்ந்த சீக்குப்பிடித்ததீவாக தொடர்ந்தும் காட்சியளிக்கிறது.

You might also like