வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் உடைத்து திருட்டு

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையம் உடைத்து திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இன்று (20.11.2018) காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையத்தினை திறப்பதற்கான சென்றிருந்த சமயத்தில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதினை அறிந்த உரிமையாளர் உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக நிலையத்திலிருந்து தொலைபேசி மீள்நிரப்பு அட்டை ,சிகரட் என்பன களவாடப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவல்களை வழங்க முடியுமேன வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like