வவுனியா நகரசபையின் கலாசார விழாவில் முன்னாள் முதல்வர் சி.வி கலந்து கொண்டால் கறுப்புக் கொடி போராட்டம் அரங்கேறும்!

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள இந்த பேஜ் ஜ லைக் செய்யுங்கள்

வவுனியா நகரசபை கலாசாரக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் கலாசார விருது வழங்கும் நிகழ்வு எதர்வரும் 2ஆம் திகதி நகரசபையில்  இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நிகழ்விற்கு முன்னாள் வடமாகாண முதலமைச்சர் தற்போது அரசியல் கட்சியின் தலைவராகவுள்ள சி. வி. விக்னேஸ்வரன் கலந்துகொள்வதற்கு சென்றால் அவருக்கு எதிராக கறுப்புக்கொடிப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளத்திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

வவுனியா நகரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த விருதுவழங்கும் நிகழ்விற்கு பல மூத்த கலைஞர்கள் படைப்பாளிகள், புறக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை ஒழுங்கு படுத்தியவர்களினால் சில முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றதற்கு பல தரப்பட்டவர்களிடமிருந்து எதிர்ப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந் நிகழ்விற்கு முன்னாள் வடமாகாண முதலமைச்சர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதையடுத்து வவுனியாவில் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள தரப்புக்கள் பல ஒன்றிணைந்து சில நகரசபை உறுப்பினர்களுடன் வடமாகாண முன்னாள் முதலமைச்சருக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கு கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளத்திட்டமிடப்பட்டுள்ளதுடன் திரைமறைவில் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

முன்னாள் வடமாகாண முதலமைச்சாக கடமையாற்றியபோது பழைய பேருந்து நிலையத்தின் செயற்பாடுகளை சரியான அணுகுமுறையில் மேற்கொள்ளப்படவில்லை இதனால் பல வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் பலர் பிரச்சினைகளுக்குள்ளாகியுள்ளதுடன் பழைய பேருந்து நிலையத்திலிருந்த ஜந்திற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் முதலமைச்சரின் நடவடிக்கையினால் மூடப்பட்டுள்ளது.

மேலும் மதகுவைத்தகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் செய்றபாடுகளுக்கும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை இதனால் பலர் வேலையிழந்தும் தொழிலின்றியும் நிர்க்கதியான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதுடன் முன்னாள் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளில் பல்துறை சமூகமும் அதிருப்தியுற்ற நிலையிலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like