வவுனியா நகரசபையின் ‘எழு நீ’ விருது விழாவிற்கு எதிராக R.T.I தாக்கல் செய்த இளைஞர்கள்!

வவுனியாவில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் எதிர்வரும் 02.12.2018 அன்று நடைபெறவுள்ள எழு நீ விருது விழா வழங்கல் நிகழ்வின் தெரிவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இன்றையதினம் (21.11.2018) இளைஞர்களினால் நகரசபை மீது பல்வேறு கேள்விகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இளைஞர்களினால் நகரசபை மீது தொடுக்கப்பட்ட வினாக்கள்

01.வவுனியா நகரசபையினால் ‘எழு நீ விருதுகள் 2018’ நிகழ்வினை நடாத்துவது தொடர்பில் எந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது?

02.இந் நிகழ்வு நடாத்துவது தொடர்பில் நடத்தப்பட்ட கூட்டத்தின் கூட்ட அறிக்கை

03.அந்த கூட்டத்திற்கு பங்குபற்றியோரின் பெயர்ப்பட்டியல்

04.நகரசபையினால் உருவாக்கப்பட்ட கலாசாரக் குழு எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது? உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்?

05. கலாசார குழுவின் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல்?

06.நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள விளையாட்டுக் கழகங்கள்,கலை இலக்கிய மன்றங்களுக்கும் நகர சபைக்குமான கலந்துரையாடல் எப்போது நடைபெற்றது?

07.நகரசபைக்கும் ஏனைய அமைப்புகளுக்கும்(விளையாட்டுக் கழகங்கள்,கலை இலக்கிய மன்றங்கள்) இடையில் நடந்த கலந்துரையாடலின் அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

08.இந்த கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டம் எப்போது நடைபெற்றது?

09.பொதுக் கூட்டத்தில் பங்குபற்றியோரின் பெயர்ப்பட்டியல்

10.பொதுக் கூட்டத்தின் கூட்ட அறிக்கை

11.அப் பொதுக் கூட்டத்தில் கலாசார சபைக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல்

12.அவர்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்?

13.அவர்களை முன்மொழிந்தவர்கள்,வழிமொழிந்தவர்கள் பெயர்ப்பட்டியல்

14.பல்துறை சேவையாளர்களை விருதுக்காக பரிந்துரைக்கும் படி வழங்கப்பட்ட அறிவித்தல்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

15.அப் பரிந்துரைகளின்படி விருதுக்கானவர்களை உறுதிப்படுத்துவதற்கு நகரசபை ‘ எழு நீ பண்பாட்டு முற்றம்’ குழுவினரால் எந்த அடிப்படையில் தெரிவிக்குழு அமைக்கப்பட்டது?

16.தெரிவிக்குழு உறுப்பினர்களது பெயர்ப்பட்டியல்

17.விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலும், அவர்களை பரிந்துரை செய்தவர்களின் பெயர்ப்பட்டியலும்

18.விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல்

You might also like