போர்க் காலத்தில் வவுனியாவில் இயங்கிய சித்திரவதைக் கூடம்

இலங்கையின் வடக்கில் போர் நடைபெற்ற காலத்தில் வவுனியா பிரதேசத்தில் ஜோசப் முகாம் என்ற பெயரில் சித்திரவதைக் கூடம் ஒன்று இயங்கி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரின் இடைநடுவில் இந்த முகாம் சம்பந்தமான விடயங்கள் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் இது சம்பந்தமாக தேடியறிய வருமாறு தான் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகாவுக்கு அழைப்பு விடுப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஊடக சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர், திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இயங்கிய கோட்டாஸ் கோம் என அழைக்கப்பட்ட சித்திரவதை கூடம் தொடர்பான தகவல் வெளியாகியிருந்தது. இதனை சர்வதேச விசாரணை குழுக்கள் சோதனையிட்டுள்ளன.

You might also like