முல்லை இளைஞர்களின் புதிய படைப்பு காலப்பயணமும் கால எச்சங்களும்

முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு இளைஞர்களின் புதிய முயற்சியாக M Plan Boys மற்றும் Black magic இணைந்து தயாரித்து வழங்க Nilavazhagan Arumugam இயக்கத்தில் காலப்பயணத்தை கருவாக கொண்டு H U N T உருவாக்கப்பட்டுள்ளது.

நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு பிரச்சினைக்கு காரணமாக அமைந்த இறந்தகாலத்தில் நடந்த ஒரு தவறை தடுக்க காலப்பயணம் மேற்கொள்ளும் ஒரு Agent அந்த காலப்பயணத்திற்குள் மாட்டுப்பட்டு தவிப்பது தான் கதைக்கரு

Time travel, Paradox, Realities போன்ற கருத்தியல்களை இணைத்து திரைக்கதை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் முக்கியத்துவமான ஒன்றான Editing மற்றும் Vfx வேலைகளை Sanojan திறம்படச்செய்துள்ளார் .

Venujan அவர்கள் இந்த படத்தில் Agent , Stealer, Mr.Hunt ஆகிய மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.

வெறும் கமர்சியல் குறும்படங்களை தாண்டி மாறுபட்ட கருத்தில் புதிய எண்ணக்கருக்களை குறும்படமாக விதைப்பதில் ஈழத்து சினிமா வளர்ச்சி காணவேண்டும் என்பதே இயக்குநரின் வேண்டுகோளாகும்.

 

You might also like